சின்னங்கள் பொருத்தும் எந்திரங்களை மே 1ம் தேதி முதல் பாதுகாக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
சின்னங்கள் பொருத்தும் எந்திரங்களை மே 1ம் தேதி முதல் பாதுகாக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீல் வைக்கப்பட்ட இயந்திரத்தை 45 நாட்கள் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்றும் இந்த தேர்தலிலேயே சின்னங்கள் பொருத்தும் எந்திரங்களை பாதுகாக்கவும் உத்தரவிட்டது. மேலும் வாக்கு இயந்திரங்கள் வைக்கும் ஸ்ட்ராங் ரூமிலேயே சின்னங்கள் பொருத்தும் எந்திரங்களை வைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.