கேரள கழிவுகளை அகற்றும் செலவு
கேரள கழிவுகளை அகற்றும் செலவு: அறிக்கை கேட்கிறது பசுமை தீர்ப்பாயம்
கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட, 10 டன் பிளாஸ்டிக், மருத்துவம் மற்றும் வீட்டு கழிவுகளை, நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே அடையாளம் தெரியாத நபர்கள் கொட்டிச் சென்றனர். இது தொடர்பாக, நாங்குநேரி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
சாலையின் இருபுறங்களிலும் பிளாஸ்டிக் பொருட்கள், மருந்துகள், மின்னணு சாதனங்கள், பழைய துணிகள் உள்ளிட்ட கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. சில இடங்களில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளதால், மக்கள் எரிக்கின்றனர். இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. இது தொடர்பாக, நாளிதழ்களில் வெளியான செய்திகள் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து, பசுமை தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது.
கேரளாவிலிருந்து நாங்குநேரி பகுதியில் கொட்டப்படும் கழிவுகளை சேகரித்து பிரித்து, அகற்ற செலவிடப்பட்ட தொகை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, தமிழக அரசு அவகாசம் கோரியுள்ளது. வழக்கின் அடுத்த விசாரணை, மே 28ல் நடக்கும். அப்போது, அரசின் சார்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.