ஐ.பிஎல் டிக்கெட் வழக்கு – பிசிசிஐக்கு உத்தரவு
ஐ.பி.எல். போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு
புகார் மனுவை பரிசீலித்து முடிவெடுக்க பிசிசிஐ, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்கி, அதனை 10 மடங்கு அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விற்பதாக மனுவில் குற்றச்சாட்டு
போட்டிகள் முடியும் தருவாயில் வழக்கு தொடரப்பட்டுள்ளது, முன்பே நீதிமன்றத்தை நாடியிருக்க வேண்டும் – தலைமை நீதிபதி அமர்வு
கள்ள சந்தையில் டிக்கெட் விற்பனை தொடர்பாக வழக்குகள் பதியப்பட்டுள்ளது – தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தகவல்