மாணவர்களுக்கு இலவச லேப்டாப்
மாணவர்களுக்கு இலவச லேப்டாப்.. மத்திய அரசின் திட்டம்.. என பரவும் செய்தி போலியானது
பிரதான் மந்திரி இலவச லேப்டாப் திட்டம் 2024′ என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் மடிக்கணினிகள் வழங்கப்படுவதாக அந்த வைரல் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இந்த செய்தி பற்றி PIB சார்பாக உண்மை சரிபார்ப்பு செய்யப்பட்டபோது, இந்த செய்தி முற்றிலும் போலியானது என்று கண்டறியப்பட்டுள்ளது.
இப்படி ஏதேனும் ஒரு செய்தி உங்களுக்கு வந்திருந்தால், அதன் உண்மைத் தன்மையை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இது முற்றிலும் போலியாக பரப்பப்பட்ட செய்தியாகும்.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் சரியாக ஏப்ரல் மே மாதங்களில் இந்த மாதிரியான பொய்யான தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பப்படுகிறது.