மஸ்ரூம் பாயா செய்முறை
மஸ்ரூம் பாயா செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
தேங்காய் துருவல் – 3 டேபிள் ஸ்பூன், ஊற வைத்த முந்திரி -10, பச்சை மிளகாய் -4, சோம்பு -1 டேபிள் ஸ்பூன், ஊற வைத்த கசகசா – 1 டீஸ்பூன், மஸ்ரூம் – 200 கிராம், வெங்காயம் -1 தக்காளி, புதினா -1 கைப்பிடி, இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன், மிளகு -1/2 டீஸ்பூன், உப்பு -1/4 டீஸ்பூன், மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன், எண்ணெய் -1 டேபிள் ஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை – தலா 2
செய்முறை முதலில் மஸ்ரூமை சுத்தம் செய்து ஒரு முறை தண்ணீரில் அலசி எடுத்துக் கொள்ளுங்கள். இது ஒரு கப் அளவு இருந்தால் சரியாக இருக்கும். அடுத்து வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது மசாலா அரைத்து விடலாம். மிக்ஸி ஜாரில் தேங்காய், முந்திரி சோம்பு, கசகசா, மூன்று பச்சை மிளகாய் இவை எல்லாம் சேர்த்து நல்ல பைன் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன் தாளிக்க கொடுத்துள்ள மசாலா பொருட்களை சேர்த்து பொரிய விடுங்கள்.
அதன் பிறகு வெங்காயம் ஒரு பச்சை மிளகாய் சேர்த்து லேசாக வதங்கிய பிறகு கொத்தமல்லியும் சேர்த்து நிறம் மாறிய பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். அதன் பிறகு தக்காளி மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதங்கிய பிறகு மஸ்ரூமை சேர்த்து மீண்டும் ஒரு முறை கலந்த பிறகு நாம் ஏற்கனவே அரைத்து வைத்து இதில் சேர்த்து கொள்ளுங்கள்.