விழுப்புரம் இரட்டைக்கொலை
விழுப்புரம் இரட்டைக்கொலை: 20 பேருக்கு ஆயுள் தண்டனை
நில தகராறு காரணமாக கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கண்ணாரம்பட்டு கிராமத்தில் 2005ல் நில தகராறு காரணமாக குலசேகரன், காத்தவராயன் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர்.
இது குறித்து 26 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இதில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஆறு பேர் வழக்கு நடைபெற்று வந்த கால கட்டத்தில் மரணம் அடைந்தனர்.
இவர்களை தவிர்த்து மீதமுள்ள 20 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தும் தலா ரூ.50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கப்பட்டது.