வாட்டி வதைக்கும் வெப்ப அலைகள்
“நமக்கு மட்டும் தானா?”
எந்த ஆண்டிலும் இல்லாத வகையில் இந்த ஆண்டின் கோடைக் காலம் மிகக் கொடூரமான காலமாக மாறியுள்ளது. வழக்கமாக வாட்டி வதைக்கும் கோடையில் வெய்யிலில் இப்போது வெப்ப அலைகளும் சேர்ந்து வீசிக் கொண்டிருக்கிறது. இதனால், சூரியன் மறைந்து விட்ட பிறகும் கூட அதன் வெக்கைகள் வீடுகளுக்குள் தங்கி இருந்து நமது உறக்கங்களை எல்லாம் திருடிக் கொண்டிருக்கிறது.
இப்படி இரவு – பகலாக உழைத்துக் கொண்டிருக்கும் சூரிய பகவானின் பொற் கிரணங்களுக்கு விலங்குகளும், பறவைகளும், பூச்சிகளும், ஊர்வனவும் தப்பிப் பிழைக்குமா என்ன ?
அந்த வாயில்லா ஜீவ ராசிகளும் இந்த வெப்ப அலைகளை எதிர் கொள்ள முடியாமல் துடி,துடித்துக் கொண்டிருக்கின்றன. பசிக்கும், தாகத்திற்கும் மட்டுமே நீர்நிலைகளைப் பயன்படுத்தி வந்த இந்த ஜீவராசிகள், தற்போது தங்களின் பயணப் பாதைகளை மாற்றி அமைத்துக் கொண்டு விட்டன.
ஆம் நண்பர்களே !
சதா காலமும் நீர் நிலைகளை நோக்கிப் படையெடுத்துச் சென்று தங்களின் உடல் சூடுகளையும், தாகங்களையும் தணித்துக் கொள்கின்றன. இதில், நீர் நிலைகள் அற்ற ஊருக்குள் வரும் ஜீவராசிகள் வீடுகளில் உள்ள கிணற்றடிகளையும்,
நீர் குழாய்களையும் நோக்கி படை எடுக்கின்றன.
இதில் ஆடு, மாடு, நாய், பூனை, பறவைகள், பூச்சிகள், தேனீக்கள்- எனப் பலவும், பகல் நேரம் முழுக்க வந்து கொண்டே இருக்கின்றன. இந்த நேரத்தில் அந்த ஜீவராசிகளுக்கு நாம் எந்த தொந்தரவும் தராமல் சற்று விலகி நிற்க வேண்டும். அப்போதுதான், அவை தமக்குத் தேவையான தாக சாந்தியை பூர்த்தி் செய்து கொள்ளும்.
முடிந்தால், அவைகள் தினமும் வந்து போகவும், எந்நேரமும் வந்து போகவுமான சிறப்பு ஏற்பாடுகளை நாம் செய்து வைப்பது சாலச் சிறந்தது.
ஏனெனில், இந்த உலகமும், அதன் செல்வச் செழிப்புகளும் நமக்கானது மட்டுமல்ல. இதில் அனைத்து உயிர்களுக்கும் பங்குள்ளது.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்