முன்னாள் டிஎன்பிஎஸ்சி தலைவர் காலமானார்
முன்னாள் டிஎன்பிஎஸ்சி தலைவர் டி. லட்சுமி நாராயணன் இன்று காலமானார். 1987-93 ஆண்டு வரை டிஎன்பிஎஸ்சி தலைவராக இருந்த போது மிகுந்த நேர்மையுடன் பணியிடங்களை நிரப்பினார்.
அரசியல் அழுத்தங்கள் தரப்பட்ட போதும், அவர் பணியவில்லை. முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி இருவரிடமும், நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி என்ற பெயரைப் பெற்றவர்.
அவரது உடலுக்கு தமிழக அரசு சார்பில் உதயசந்திரன் அஞ்சலி செலுத்தினார்.