பிரதமர் மோடியின் பேச்சுக்கு கண்டனம்
பிரதமர் மோடியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்ததோடு எந்த சட்டபிரிவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் கூறிய திருமாவளவன்
“ராஜஸ்தான் பன்ஸ்வாரா தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் நரேந்திர மோடி இஸ்லாமியர்களுக்கு எதிரான நச்சுக் கருத்துக்களை தெரிவித்தார்;
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பல ஆண்டுகளுக்கு முன்பு கூறிய கருத்துகளை திரித்து இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு வரும் விதமாகவும், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாகவும் பிரதமர் மோடி பேசி உள்ளார்
பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானதாகவும் உள்ளது
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஒற்றுமை, மதச் சார்பின்மை ஆகிய கோட்பாடுகளுக்கு நேர் எதிராக பிரதமர் மோடியின் பேச்சு அமைந்துள்ளது;
அரசியல் ஆதாயத்திற்காக மத ரீதியான வன்முறையைத் தூண்டுவதுதான் பிரதமர் மோடியின் நோக்கம் என்பது தெளிவாகத் தெரிகிறது
பிரதமர் மோடியின் பேச்சு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 123 (3a) இன் கீழ் குற்றமாகும்
என கூறியுள்ளார் விசிக தலைவர் திருமாவளவன்