ஜோலார்பேட்டை வழியாக பெங்களூருக்கு சிறப்பு ரயில்.

அசாம் மாநிலம் நியூ தின்சுகியாவில் இருந்து சென்னை பெரம்பூர், காட்பாடி(வேலூர்), ஜோலார்பேட்டை வழியாக பெங்களூருக்கு சிறப்பு ரயில்.

வடகிழக்கு பிராந்திய ரயில்வே மண்டலம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்

அசாம் மாநிலம் நியூ தின்சுகியாவில் இருந்து பெரம்பூர், காட்பாடி(வேலூர்), ஜோலார்பேட்டை வழியாக பெங்களூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு ;

வண்டி எண் 05952 நியூ தின்சுகியா – பெங்களூர் சிறப்பு ரயில் மே 2ம் தேதி முதல் ஜூன் 27ம் தேதி வரை வியாழக்கிழமைகளில் மாலை 6.45க்கு புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணிக்கு பெங்களூர் வந்து சேரும்.

மறு மார்க்கத்தில் வண்டி எண் 05951 பெங்களூர் – நியூ தின்சுகியா சிறப்பு ரயில், மே 6ம் தேதி முதல் ஜூலை 1ம் தேதி வரை திங்கட்கிழமைகளில் பெங்களூரில் இருந்து புறப்பட்டு புதன்கிழமைகளில் பகல் 1.15க்கு நியூ தின்சுகியா சென்றடையும்.

தமிழகத்தில் இந்த ரயில் சென்னை பெரம்பூர், காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை ரயில் நிலையங்களில் மற்றும் நின்று செல்லும்.

Leave a Reply

Your email address will not be published.