ஆட்சி மாற்றத்துக்கான நல்ல அறிகுறி!
ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த தேர்தல் பரப்புரையில் பேசிய மோடி, நீங்கள் கடினமாக உழைத்துச் சேர்த்த சொத்தை அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் முஸ்லீம்களுக்கு தரப் போகிறீர்களா? என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், உங்கள் தாலி கூட மிஞ்சாது என்று வெறுப்பைக் கக்கியிருந்தார்.
பிரதமரின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. முஸ்லீம்களுக்கு சொத்துகளை பிரித்துக் கொடுப்போம் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதாக மோடி சொல்வது, அப்பட்டமான பொய் என்கிறது காங்கிரஸ்.
மக்களவை தேர்தலில் பாஜக 150 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது என்று கூறப்படும் நிலையில், இந்துக்கள் வாக்குகளைக் கவர மோடி பேசிய பேச்சு, அவருக்கே ஆபத்தாக முடிந்துள்ளது.
தோல்வி பயத்தில் எதைப் பேசுவது என்று தெரியாமல் மோடி குழம்பிப் போயிருப்பதையே இது காட்டுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக சிறுபான்மை மக்களுக்கு எதிரான, குறிப்பாக முஸ்லீம்களுக்கு எதிரான மோடி அரசின் செயல்பாட்டை மறக்க முடியுமா?
மோடியின் இந்த சர்ச்சைப் பேச்சை இந்துக்களே ரசிக்கவில்லை. இரு மதங்களுக்கு இடையே மோதல் போக்கை பிரதமரே உருவாக்குவதா? என்று மடாதிபதிகளும் கேள்வி எழுப்பத் தொடங்கி விட்டார்கள்.
இந்நிலையில், முஸ்லீம்களுக்கு தான் எதிரியல்ல என்றும், அவர்களுக்கு நிறைய நன்மைகள் செய்துள்ளதாகவும் கூறியிருக்கிறார்.
முஸ்லீம்களுக்கு எதிராகப் பேசினால், இந்துக்கள் கொதித்து எழுவார்கள் என்ற மோடியின் நினைப்பில் மண் விழுந்திருக்கிறது.
இது ஆட்சி மாற்றத்துக்கான நல்ல அறிகுறியே.