மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார்
வெறுப்பு பேச்சு: பிரதமர் மோடி மீது டெல்லி காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார்
வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது டெல்லி காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் அளித்துள்ளது. டெல்லி மந்திர்மார் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா காரத் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், ஒரு சமூகத்துக்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் பதவியில் உள்ள மோடி பேசி உள்ளார் என்றும், பிரதமர் மோடி வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் ஊடுருவியவர்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார் என்றும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது குற்ற வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.