மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்க மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்க மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.சித்தூர் மாநகராட்சி சார்பில் கலெக்டர் மோகன் உத்தரவின் பேரில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இந்த பேரணியில் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஒவ்வொரு வாக்காளரும் தேர்தலில் கலந்து கொண்டு வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்த வேண்டும். மாநகரில் உள்ள கொங்காரெட்டிப்பள்ளி அரசு சிஆர் ரெட்டி பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாக்களிக்கும் உரிமை குறித்த விழிப்புணர்வு, அனைவரும் வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்தி ஒழுக்கமாக வாக்களிக்க வேண்டும் என மாணவர்கள் கையில் பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பினர்.