உஷா உதுப், ராம் நாயக் ஆகியோருக்கும் விருது

வெங்கையாநாயுடு, மிதுன் சக்ரவர்த்திக்கு பத்ம விருது வழங்கினார் ஜனாதிபதி முர்மு:

டெல்லியில் நேற்று நடந்த விழாவில் வெங்கையாநாயுடு, மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை வழங்கி ஜனாதிபதி கவுரவித்தார். நாட்டின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள், பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, சிவில் சர்வீஸ் போன்ற பல்வேறு துறைகள் அல்லது செயல்பாடுகளின் துறைகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு விருதுகள் அறிவிக்கப்படும். இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டவர்களுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடந்தது.

விருதுக்கு தேர்வு பெற்றவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி கவுரவித்தார். இந்த விழாவில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு, சுலப் இன்டர்நேஷனல் பிந்தேஷ்வர் பதக், பிரபல பரதநாட்டிய நடனக் கலைஞர் பத்மா சுப்ரமணியம் ஆகியோருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. நடிகர் மிதுன் சக்ரவர்த்தி, பாடகி உஷா உதுப், உத்தரபிரதேச முன்னாள் கவர்னர் ராம் நாயக், தொழிலதிபர் சீதாராம் ஜிண்டால் ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published.