மம்தா பானர்ஜி காவி நிறத்தில் தூர்தர்ஷன்!
காவி நிறத்தில் தூர்தர்ஷன்!
தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்?
மம்தா கேள்வி.
இந்திய அரசுத் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்சனின் இலச்சினையின் நீல நிறம் இன்றிலிருந்து காவி நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
“தங்களின் புதிய அவதாரம்..” எனக் குறிப்பிட்டுள்ளது தூர்தர்சன்.
இந்த நிலையில், தூர்தர்ஷன் இலச்சினை நிறம், ‘காவி நிறமாக’ மாற்றப்பட்டுள்ளதற்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது, ”தூர்தர்ஷன் லோகோவின் நிறத்தின் திடீர் காவிமயமாக்கம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
நாடு முழுவதும் தேர்தல் நடைபெறும் நேரத்தில், நம்முடைய தூர்தர்ஷன் லோகோவின் நிறம் மாற்றபபட்டிருப்பது அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இந்த நடவடிக்கை தார்மீகமற்றது, சட்டவிரோதமானது. இதன்மூலம், தேசிய அளவிலான பொது ஒளிபரப்பு நிறுவனம் (தூர்தர்ஷன்), பாஜகவுக்கு ஆதரவானதாக ஒருதலைபட்சமாக மாற்றப்பட்டுவதை மேற்கண்ட நடவடிக்கை உரக்கச் சொல்கிறது.
மக்கள் தேர்தல் மீது கவனம் செலுத்தி வரும் சூழலில், இத்தகைய கொடூர காவிமயமாக்கலை, தேர்தல் நடத்தை விதிமீறலை தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்?
தேர்தல் ஆணையம் உடனடியாக இதை நிறுத்த வேண்டும். நிறம் மாற்ற நடவடிக்கையை திரும்பப் பெறச் செய்து, தூர்தர்ஷன் லோகோவின் நிறம் ஏற்கெனவே இருந்தபடி நீல நிறத்திற்கு மாற்றம் செய்யப்பட வேண்டும்!” என தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டு கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார் மம்தா பானர்ஜி