சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 5,000 அரிய வகை ஆமைகள் பறிமுதல்
மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 5,000 அரிய வகை சிவப்பு காது ஆமை குஞ்சுகள் பறிமுதல் செய்யபட்டது. சோதனைக்கு பயந்து, ஆமை குஞ்சுகள் இருந்த 2 சூட்கேஸ்களை கன்வேயர் பெல்டில் விட்டுவிட்டு பயணி தப்பி ஓடியுள்ளார். கைப்பற்றப்பட்ட 5,000 ஆமை குஞ்சிகளையும் மலேசிய நாட்டுக்கே திருப்பி அனுப்ப விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
