ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடியில் சூறைக்காற்றுடன் மிதமான மழை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடியில் சூறைக்காற்றுடன் மிதமான மழைபெய்து வருகிறது. சிக்கள்ளி, அண்ணாநகர், இக்களூர், தலமலை, தொட்டகாஜனூர், ஆசனூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. 2 நாட்களாக விட்டு விட்டு மழைபெய்து வருவதன் காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.