புதுச்சேரி முதல்வருக்கு நெருக்கமானவர் வீட்டில் இருந்து ரூ.3.60 கோடி பறிமுதல்
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு நெருக்கமானவர் வீட்டில் இருந்து ரூ.3.60 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு நெருக்கமான பைனான்சியர் முருகேசன் என்பவரது வீட்டில் இருந்து ரூ.3.60 கோடியை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்தது. ரூ.1 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் மற்றும் ரூ.2.60 கோடி மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.