புதிய மெட்ரோ ரயில் நிலையம்
சென்னை போரூர் பைபாஸ் சாலையில், புதிய மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த மெட்ரோ ரயில் நிலையத்தில் என்னென்ன வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. எந்த அளவிற்கு நவீன கட்டமைப்பில் உருவாக்கப்பட உள்ளது என்பதை பார்ப்போம்.சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரயில் விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையிலும், கோயம்பேடு முதல் பரங்கிமலை வரையிலும் இரு வழித்தடங்களில் 55 கிலோ மீட்டர் துரத்திற்கு இருக்கிறது. புறநகர ரயில் பாதைகள் பெரிய அளவில் இல்லாத கோயம்பேடு திருமங்கலம் வழியாக ஒரு வழியும், பரங்கிமலை, சைதாபேட்டை வழியாக மறுவழித்தடமும் இருப்பதால் சென்னை மெட்ரோ ரயிலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.. தினசரி லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணிக்கிறார்கள். ஒரு மாதத்திற்கு பயணிக்கும் பயணிகள் எண்ணிக்கை சுமார் 90 லட்சம் என்கிற அளவில் நெருங்கி வருகிறது.முதற்கட்ட மெட்ரோவிற்கு கிடைத்த வரவேற்பு காரணமாக உடனடியாக சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், மொத்தம் 3 வழித் தடங்களில் 116.1 கி.மீ. தொலைவில் செயல்படுத்தப்படுகிறது. சென்னை முழுவதும் உயர்மட்ட பாதை, சுரங்கப் பாதை மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதில் மாதவரம் முதல் ஓஎம்ஆர் சாலையில் உள்ள சிப்காட் 2 வரை 45.4 கிமீ நீளத்திற்கு 3வது வழித்தடம் அமைக்கப்படுகிறது. இதில் 19 கிலோ மீட்டர் மேம்பாலத்திலும், 26.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு பூமிக்கு அடியிலும் பாதை செல்கிறது. இந்த வழித்தடத்தில் மொத்தம் 49 ரயில் நிலையங்கள் அமைகிறது.அடுத்தாக 4வது வழித்தடம் மெரினா கலங்கரை விளக்கம் முதல் – பூந்தமல்லி பேருந்து நிலையம் வரை அமைக்கப்படுகிறது. 26.09 கிமீ தூரமுள்ள இந்த வழித்தடத்தில் 16.02 கிமீ தூரம் மேம்பாலத்திலும், 10.07 கிமீ தூரம் நிலத்திற்கு அடியிலும் அமைகிறது. இந்த வழித்தடத்தில் 28 ரயில்கள் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.அடுத்தாக வழித்தடம் 5, மாதவரம் பால் பண்ணை மற்றும் சோழிங்கநல்லூர் இடையே அமைகிறது. 44 .6 கிமீ தூரத்திற்கு அமையும் இந்த வழித்தடத்தில் 38.77 கிமீ தூரம் மேம்பாலத்திலும், 5.83 கிமீ தூரம் நிலத்திற்கு அடியிலும் அமைகிறது. இந்த வழித்தடத்தில் 48 ரயில்கள் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. இதில் ஐந்து ரயில் நிலையங்கள் பூமிக்கு அடியில் அமைகிறது.அடுத்தாக 4வது வழித்தடம் மெரினா கலங்கரை விளக்கம் முதல் – பூந்தமல்லி பேருந்து நிலையம் வரை அமைக்கப்படுகிறது. 26.09 கிமீ தூரமுள்ள இந்த வழித்தடத்தில் 16.02 கிமீ தூரம் மேம்பாலத்திலும், 10.07 கிமீ தூரம் நிலத்திற்கு அடியிலும் அமைகிறது. இந்த வழித்தடத்தில் 28 ரயில்கள் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.அடுத்தாக வழித்தடம் 5, மாதவரம் பால் பண்ணை மற்றும் சோழிங்கநல்லூர் இடையே அமைகிறது. 44 .6 கிமீ தூரத்திற்கு அமையும் இந்த வழித்தடத்தில் 38.77 கிமீ தூரம் மேம்பாலத்திலும், 5.83 கிமீ தூரம் நிலத்திற்கு அடியிலும் அமைகிறது. இந்த வழித்தடத்தில் 48 ரயில்கள் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. இதில் ஐந்து ரயில் நிலையங்கள் பூமிக்கு அடியில் அமைகிறது.4வது வழித்தடம் மெரினா கலங்கரை விளக்கம் முதல் – பூந்தமல்லி பேருந்து நிலையம் வரை அமையும் மெட்ரோ வழித்தடம் மிகவும் முக்கியமான வழித்தடம் ஆகும். இந்த வழித்தடம் மெரினா பீச், மயிலாப்பூர், போட் கிளப், நந்தனம், தி நகர், வடபழனி, சாலிகிராமம் போன்ற சில மத்திய நகர பகுதிகளையும், போரூர் சந்திப்பு, வளசரவாக்கம் மற்றும் பூந்தமல்லி போன்ற மேற்கு புறநகர் பகுதிகளையும் இணைக்கிறது. தற்போதைய நிலையில் மெரினா, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து போரூர் மற்றும் பூந்தமல்லி செல்வது நீண்ட நேரம் ஆகும். கடும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். இந்த பாதை பயன்பாட்டிற்கு வந்தால் சென்னையின் மையப்பகுதிகளில் உள்ள போக்குவரத்து நெரிசல் பெரிய அளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..இந்த வழித்தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை 10.07 கிமீ தூரத்திற்கு சுரங்கப் பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரை 16.02 கிமீ உயர்மட்டப்பாதையாகவும் அமைக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் அமைய உள்ள 26 ரயில் நிலையங்களில் 9 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களாகவும், 18 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களாகவும் அமைய உள்ளன. உயர்மட்ட, சுரங்கப்பாதை பணி, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, போரூர் பைபாஸ் சாலையில், புதிய மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.. தற்போதைய நிலையில் பூந்தமல்லி – கலங்கரை விளக்கம் மெட்ரோ ரயில் வழித்தடத்தில் கோடம்பாக்கம் – பூந்தமல்லி வரையில் உயர்மட்டப் பாதை அமைக்கும் பணியில் 60 சதவீத கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து போரூர் பைபாஸ் சாலை மேல் பகுதியில், மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நகரும் படிக்கட்டுகள், மின்தூக்கிகள், கழிப்பிடங்கள், சிசிடிவி கேமரா உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளுடன் ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது இந்த தடத்தில், கோடம்பாக்கம் வரையிலான பணிகளை டிசம்பரில் முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.