இலங்கையில் ஆசிரியர் பயிற்றுனர்
தகுதி: Engilsh/Mathematics/Biology/Physics/ Chemistry ஆகிய பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் முதுநிலைப் பட்டம் பெற்று பி.எட்., படித்திருக்க வேண்டும். 10ம் வகுப்பு, பிளஸ் 2 ஆசிரியராக 5 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருடம் ஆசிரியர் பயிற்றுனர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பதாரரின் கல்வித்தகுதி, பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு 3 மாதம் பணி வழங்கப்படும். பின்னர் தேவைக்கேற்ப பணிக்காலம் நீட்டிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு உணவு, தங்குமிடம், போக்குவரத்து வசதி செய்து தரப்படும். இலங்கையில் கண்டி, மாத்தளை, நுவரேலியா, ரத்தினபுரா, கேகலே, பதுல்லா ஆகிய இடங்களில் ஏதேனும் ஒன்றில் பணிபுரிய வேண்டும்.