விவிபேட் சீட்டு வழக்கு: விசாரணைக்கு ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
பதிவான வாக்குகளை விவிபேட் சீட்டுகளுடன் சரிபார்ப்பதை கட்டாயமாக்கக்கோரிய வழக்கை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதே கோரிக்கை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளதால் விசாரணைக்கு ஏற்க முடியாது என்று கூறி கமிலஸ் செக்வா என்பவர் தொடர்ந்த வழக்கை ஐகோர்ட் அமர்வு முடித்து வைத்தது.