ரூ.8.5 லட்சம் பணம் பறிமுதல்
பெரம்பலூர் அருகே ஆவணங்களின்றி எடுத்துச்சென்ற அதிமுக ஒன்றிய செயலாளர் காரில் இருந்து ரூ.8.5 லட்சம் பணம் பறிமுதல்
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதனால் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க தீவிர வாகன தணிக்கை நடந்து வருகிறது.
இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் ஆலத்தூர்கேட்டு செல்லும் சாலையில் சங்கிலி பிள்ளையார் கோவில் அருகே இன்று காலை வேளாண்மை உதவி பொறியாளர் சத்யா தலைமையிலான நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக அதே கிராமத்தை சேர்ந்த ஆலத்தூர் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் சசிகுமார் என்பவர் ஸ்கார்பியோ காரை சோதனை செய்தபோது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட சுமார் ரூ.8லட்சத்து 50ஆயிரம் பணம் இருந்தது. அவற்றை நிலையான கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து பணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.