பிரிஜ் பூஷண் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்
வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை: பாஜக எம்.பி.
மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பா.ஜ.க. எம்.பி. பிரிஜ் பூஷண் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜரானார். பிரிஜ் பூஷண் மீதான பாலியல் வழக்கில் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஏப்.26-ல் தீர்ப்பு வழங்குகிறது. அகில இந்திய மல்யுத்த சங்க தலைவராக இருந்தபோது வீராங்கனைகளுக்கு பிரிஜ் பூஷன் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மல்யுத்த வீராங்கனைகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.