தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் மீது வழக்குப்பதிவு
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக விஜயகாந்த் இளைய மகன் சண்முக பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விருதுநகரில் அவரது சகோதரர் விஜயபிரபாகரனுக்காக அனுமதியின்றி பிரச்சாரம் செய்ததாக புகார் எழுந்தது. விஜயகாந்த் மகனும், நடிகருமான சண்முக பாண்டியன் உட்பட அதிமுக, தேமுதிக நிர்வாகிகள் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.