தனக்கு பழச்சாறில் விஷம் கலந்து தந்தார்கள்: மன்சூர் அலிகான் அறிக்கை
தனக்கு பழச்சாறில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டதாக நடிகரும் வேலூர் தொகுதி வேட்பாளருமான மன்சூர் அலிகான் அறிக்கை வெளியிட்டுள்ளார். தேர்தல் தொடர்பான பணிக்காக குடியாத்தம் சந்தையில் இருந்து வீடு திரும்பிய போது வழியில் சிலர் பழச்சாறு மற்றும் மோர் வழங்கினர். கட்டாயப்படுத்தி அவர்கள் கொடுத்த பழச்சாறை குடித்த சில மணி நிமிடங்களிலேயே மயக்கம், நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். விஷ முறிவு, நுரையீரல் வலிக்கான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது என மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.