சிபிஐ பதிலளிக்க ஐகோர்ட் கிளை ஆணை
திருச்சி துவாக்குடி கனரா வங்கியில் கடன் வழங்கியதில் முறைகேடு:
திருச்சி துவாக்குடி கனரா வங்கியில் கடன் வழங்கியதில் நடந்த பல கோடி ரூபாய் மோசடி பற்றி சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் கனரா வங்கியின் மண்டல மேலாளரை தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்த்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வங்கியில் கடன் வழங்கியதில் முறைகேடு புகார் குறித்து மண்டல மேலாளர், சிபிஐ தரப்பில் பதிலளிக்க ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. கனரா வங்கியில் பல கோடி ரூபாய் கடன் வழங்கி மோசடி செய்ததில் வங்கி அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக மனுதாரர் தெரிவித்திருந்தார். திருச்சியை சேர்ந்த தனபாலன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் ஒத்திவைத்தார்.