கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் 2 இடங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு
கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் 2 இடங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. எடத்வா மற்றும் செருதானா கிராமங்களில் வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. பறவைக் காய்ச்சல் பாதிப்புள்ள வாத்துகளின் மாதிரி போபால் ஆய்வகத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தின் ஆலப்புழா மாவட்டத்தில் எடத்வா மற்றும் செருதானா கிராமங்களில் இயங்கிவரும் சில கோழி பண்ணைகளில் கோழி, வாத்து போன்ற பறவைகள் கூட்டமாக இறந்து வருகின்றன. இதனைத் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டதில் பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. பறவை காய்ச்சல் பாதிப்புக்குள்ளான பறவைகளை அழித்து வருகின்றனர். மேலும் பரவாமல் இருக்கும் வகையில் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.