கள்ளழகர் திருவிழாவில் நீரை பீச்சி
பாரம்பரிய நடைமுறை பாதிப்பதோடு, பக்தர்கள் மனம் புண்படும்.. கள்ளழகர் திருவிழாவில் நீரை பீச்சி அடிக்க கட்டுப்பாடு விதித்த ஆட்சியர் ஆணைக்கு ஐகோர்ட் கிளை தடை..!!
கள்ளழகர் கோயில் திருவிழாவின்போது நீரை பீச்சி அடிக்க கட்டுப்பாடுகளை விதித்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையில் சித்திரை திருவிழா களைகட்டி வருகிறது. இந்த நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வானது வருகின்றன 23ம் தேதி காலை நடைபெற உள்ளது.
இந்த சூழலில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக அழகர் ஆற்றில் இறங்கும் போது அழகர் வேடமணிந்த பக்தர்கள் நூற்றுக்கணக்கானோர் அழகர் தங்க குதிரை வாகனத்தில் வரும் அழகர் மீது தோலினால் ஆன பையில் சிறு மோட்டார்களை தண்ணீரை அடிப்பார்கள். எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சிலை பாதிக்கப்படும் என்று கடந்த சில வாரங்களுக்கு முன்பு மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் கிளை நீதிபதி மின்மோட்டர்களை பயன்படுத்தி அடிக்கக்கூடாது. மேலும் முன்பதிவு செய்யவேண்டும் என்ற விதிமுறைகளை விதித்து உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை கூட்டத்தில் வேடமணியும் பக்தர்கள் அழகர் ஆற்றில் இறங்கும் போது தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் போது முன்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதனடிப்படையில் மதுரையைச் சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் அருள் அமிர்தன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அழகர் ஆற்றில் இற்றங்கும் போது பலநூறு ஆண்டுகளாக கடைபிடிக்கப்படும் ஆட்டுத்தோலினால் ஆன பையில் நறுமண நீரை நிரப்பி அழகர் மீது பீய்ச்சி அடிக்கும் நிகழ்வானது பல நூறு ஆண்டுகளாக நடைபெறுகிறது.
இதற்கு முன்பதிவு செய்ய வேண்டும் என்பது ஏற்புடையது அல்ல இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மேலும் நூற்றுக்கணக்கான கிராமமக்கள் பங்கேற்பார்கள். தற்போது வரை 7 பேர் பதிவு செய்துள்ளனர். இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டனர். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மாவட்ட ஆட்சியர் இந்த உத்தரவை பிறப்பிப்பதற்கு முன்பாக சட்ட வல்லுனரை ஆலோசித்தாரா, எதன் அடிப்படையில் இது ஆலோசிக்கப்பட்டது.
அழகர் கோவில் நிர்வாகத்தினர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனரா என்று கேள்வி எழுப்பியுள்ள நீதிபதிகள் வருகின்ற 23ம் தேதி அழகர் ஆற்றில் இறங்கும் போது வேடமணிந்த பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடிப்பதற்கு முன்பதிவு செய்ய வேண்டும் என்ற மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். அழகர் கோவில் இணை ஆணையர் எத்தனை ஆண்டுகளாக இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
இது போன்று தண்ணீரை பீய்ச்சி அடிப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதா, இது போன்ற நிகழ்வுகளால் அழகர் சிலைக்கு சேதம் ஏற்பட்டுள்ளதா உள்ளிட்ட விவரங்களை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகின்றன திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். மேலும் பாரம்பரிய நடைமுறை பாதிப்பதோடு, பக்தர்கள் மனதை புண்படுத்தும் என கருதுவதால் ஆட்சியர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்து உத்தரவிட்டது.