ஐபிஎல் தொடரிலிருந்து டெவோன் கான்வே விலகிய நிலை
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து டெவோன் கான்வே விலகிய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிச்சர்ட் க்ளீசன் சேர்க்கப்பட்டார். நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் அதிகபட்ச ரன்கள், அதிகபட்ச சிக்ஸர்கள் என அமர்க்களமாக நடைபெற்று வருகிறது.
பிளேஆஃப் சுற்றில் பங்குபெற ஒவ்வொரு அணிகளும் கடுமையாக போராடி வருகின்றன. பெங்களூரு, மும்பை, பஞ்சாப் அணிகளை தவிர மற்ற அணிகள் குறைந்தது 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து டெவோன் கான்வே விலகிய நிலையில் ரிச்சர்ட் க்ளீசன் சேர்க்கப்பட்டுள்ளார்.