தேர்தல் ஆணையம்
நாளை மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்வதால் அதன் பிறகு கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்.
நாளை மாலை 6 மணிக்கு மேல் எந்த வகையிலும் பிரச்சாரம் மேற்கொள்ளக்கூடாது.
நாளை மாலை 6 மணிக்கு மேல் ஊடகங்கள், சமூக வலைதளங்கள் உள்ளிட்ட எந்த வகையிலும் பிரச்சாரம் செய்யக்கூடாது.
பிரச்சாரம் ஓய்ந்த உடன் நாளை மாலை 6 மணிக்கு மேல் வெளியூர் நபர்கள் வெளியேற வேண்டும்.
ஓட்டல்கள், விடுதிகளில் வெளியூர் நபர்கள் இல்லை என்று நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.