துபாயில் வரலாறு காணாத அளவிற்கு மழை
துபாயில் வரலாறு காணாத அளவிற்கு அதிகப்படியான மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 16 சென்டிமீட்டருக்கு மேல் மழை பதிவாகியுள்ளதாக அமீரக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
துபாயில் ஒரு வருடத்திற்கு சராசரியாக பெய்யும் மழை அளவு 3.5 இன்ச், ஆனால் நேற்று ஒரே நாளில் 6.4 இன்ச் அளவிற்கு மழை பொலிவு இருந்ததால் நகரில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
துபாய் விமான நிலையம் பகுதி அளவு மட்டுமே செயல்பட்டு வருகிறது.
துபாய் சர்வதேச விமான நிலையம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்ததால், விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்
நாடு முழுவதும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது