இன்றைய நாளிதழ்களில் வெளியான பாஜகவின் 100 கேள்விகளும் பித்தலாட்டம்: திமுக

தி.மு.க.வைப் பார்த்து 100 கேள்விகள் கேட்கும் பாஜகவின் செயல் அனைத்தும் பித்தலாட்டம் என திமுக விமர்சித்துள்ளது.

தி.மு.க.வின் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என பா.ஜ.க. பத்திரிகை விளம்பரங்களின் மூலம் இன்று 100 கேள்விகளை எழுப்பியது. இதில், 43 வாக்குறுதிகளைக் குறிப்பிட்டுள்ளது.

2021 தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தி.மு.க. மக்களுக்குத் தந்த வாக்குறுதிகள் 505. இவற்றில் உங்கள் கணக்குப்படி 43 வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை; வாதத்திற்காக ஒப்புக் கொள்கிறோம்.

தி.மு.க. அளித்த வாக்குறுதி 505-ல் இந்த 43 தவிர உங்கள் கணக்குப்படி எஞ்சியவைகள் 462 வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுவிட்டன அல்லவா?

ஜனநாயக முறைப்படி தேர்தல் அறிக்கையில் கூறப்படும் வாக்குறுதிகளை 5 ஆண்டுகளில் நிறைவேற்ற வேண்டும் என்பதால், தி.மு.க. ஆட்சியின் 5 ஆண்டுகளில் முடிந்திருப்பது 3 ஆண்டுகள்.

எஞ்சியுள்ள 2 ஆண்டுகளில் மிச்சமுள்ள 43 கோரிக்கைகளையும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் நிறைவேற்றி முடித்துவிட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிடுவோம் என திமுக பதிலடி

Leave a Reply

Your email address will not be published.