மதியம் 2 மணிவரை பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை
நெல்லை கூடங்குளம் முதலாவது அணுமின் நிலையத்தில் 79 நாட்களுக்குப்பிறகு மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. கூடங்குளத்தில் வருடாந்திர பராமரிப்புப் பணிக்காக கடந்த ஜனவரி மாதம் மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டது. 300மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கிய நிலையில் நாளை மாலைக்குள் 1,000 மெகாவாட்டை எட்டும். மேலும் கூடங்குளத்தில் உள்ள 2 உலைகளில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது
நீலகிரி உதகை அருகே பைக்காரா படகு இல்லம் இன்று முதல் 30ம் தேதி வரை 15 நாட்களுக்கு மூடப்படுவதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சாலை அமைக்கும் பணி காரணமாக பைக்காரா படகு இல்லம் 15 நாட்களுக்கு மூடப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் M.S தரணிவேந்தன் அவர்களை ஆதரித்து பெரணமல்லூர் மேற்கு ஒன்றியம் கெங்காபுரம் ஊராட்சியில் . கழக மாநில மருத்துவரணி துணைத் தலைவரும்,போளூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் டாக்டர் எ.வ.வே கம்பன் M.D., அவர்கள் பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.
தஞ்சாவூர் பாபநாசம் அருகே மயிலாடுதுறை அதிமுக வேட்பாளர் பாபுவை தடுத்து நிறுத்தி கரும்பு விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பட்டவர்த்தி கிராமத்தில் வாக்குசேகரிக்க சென்ற அதிமுக வேட்பாளர், விவசாயிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த சம்பவத்தில் குற்றவாளிகள் கைது செய்யவில்லை என்று கூறி வேங்கைவயல் கிராம மக்கள் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறிய நிலையில் எந்தவித அரசியல் கட்சிகளும் தேர்தல் பரப்புரைக்கு செல்லவில்லை. நாம் தமிழர் கட்சியின் திருச்சி நாடளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ராஜேஷ் இன்று வேங்கைவயல் கிராமத்துக்கு வாக்கு சேகரிக்க சென்றார். ஆனால் வாக்கு சேகரிப்பின் போது அப்பகுதி மக்கள் பிரச்சாரம் நடைபெற்ற இடத்திற்கு வரவில்லை.
தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே திட்டங்குளம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனையில் ரூ.1.15 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணமின்றி காரில் கொண்டு சென்ற ரூ.1.15 லட்சத்தை பறிமுதல்செய்து கோவில்பட்டி வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். வேட்பாளருடன் பரப்புரைக்கு வந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வாகனத்திலும், முன்னாள் எம்எல்ஏ- க்களின் வாகனங்களிலும், சோதனை நடத்தினர். தேனி தொகுதிக்கு உட்பட்ட உத்தப்பநாயக்கணூர் கல்லூத்து பகுதிகளில் பரப்புரைக்கு வந்தபோது சோதனை நடத்தப்பட்டது
சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள ஒரு பெயிண்ட் கடையில் இன்று காலை 9மணி அளவில் திடீரென தீ பிடித்தது. தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்ட தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில், பெயிண்ட் எரிந்ததால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழந்துள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டது மின்சாதன கோளாறு காரணமாக தீப்பற்றியதாக தகவல்.
மதுரை: கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி மதுரை திருமங்கலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. திருமங்கலம், கப்பலூர் சிட்கோ பகுதியில் 2,000க்கும் மேற்பட்ட கடைகள், நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளது. கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் கேட்டு தகராறு செய்வதாக புகார் எழுந்துள்ளது. சுங்கச்சாவடியை அகற்றாவிடில் மக்களவை தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஜி.வி.கஜேந்திரனை ஆதரித்து திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு நகர பகுதியில் நகர அதிமுக செயலாளர் எம்.ஜி ராதாகிருஷ்ணன் தலைமையில் அதிமுகவினா் வீதி வீதியாகச் சென்று பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு வாக்கு சேகரித்தனா்.