நாம் தமிழர் கட்சிக்கு விஜய் மறைமுக ஆதரவு.. சாட்டை துரைமுருகன் பேச்சு

திருச்சியில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர்,

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நாம் தமிழர் கட்சிக்கு மறைமுகமான ஆதரவை கொடுத்திருக்கிறார் என சொல்லலாம்.

அவர் நடித்துள்ள கோட் படத்தின் பாடல் வெளியாகியிருக்கிறது. அதில் வந்து campaign தொடங்கி மைக்கை பிடி என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுளது. அந்த காட்சியில் மைக்கை வைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும் மைக் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க மறைமுக ஆதரவு தருவதாகத் தான் பார்க்கிறோம். நேரடியாக அவர் ஆதரவு தெரிவிக்கவில்லை. மைக்கை வைத்தால் அது நாம் தமிழர் கட்சியை தான் சென்றடையும் என விஜய்க்கு தெரியும்.

சீமான் மற்றும் விஜய்யின் கொள்கைகளிலும் பெரிய அளவில் வேறுபாடில்லை. நாங்களும் அடிப்படை அரசியல் மாற்றம் என சொன்னோம். விஜய் வெளியிட்ட அறிக்கையிலும் அடிப்படை மாற்றம், அமைப்பு மாற்றம் என சொல்லியிருக்கிறார். இரண்டு கட்சிகளிலும் பெரிய அளவில் மாறுபாடில்லை. இனி விஜய் எடுத்து வைக்கப்போகிற பிரச்சினைகளும், அதற்கான தீர்வுகளிலும் தான் எந்த மாதிரியான அரசியலை முன்னெடுத்து போகிறார் என தெரிய வரும்.

நாம் தமிழர் கட்சிக்கும், தமிழக வெற்றிக் கழகத்துக்கும் இப்போது வரை எந்தவித முரண்பாடும் இல்லை. விஜய்யின் அரசியல் வருகையை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டாராக திகழக்கூடியவர், ரூ.150 கோடி சம்பளம் பெறுபவர், இந்தியா முழுக்க தெரிந்த பேன் இந்தியா ஸ்டாராக இருப்பவர் அதை விட்டு விட்டு அரசியலுக்கு வருகிறார். 2026ல் இரண்டு கட்சிகளும் இணைவதற்கான பல கட்ட பேச்சுவார்த்தைகள் போய் கொண்டு இருக்கிறது. ஒருவேளை தனித்தனியாக நின்றாலும் கூட கொள்கை ஒரே பாதையில் நிற்க வாய்ப்புள்ளது” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.