அதிமுகவை உடைக்கும் முயற்சி ஒருபோதும் நடக்காது:
அதிமுகவை உடைக்கும் முயற்சி ஒருபோதும் நடக்காது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காஞ்சிபுரம் (தனி) தொகுதியில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். காஞ்சிபுரம் வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்; அதிமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களால்தான் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. அதிமுக அரசின் குடிமராமத்து திட்டத்தால் பல பயன்களை மக்கள் பெற்றனர்.
