பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்குறுதி
தென்சென்னை தொகுதியில் உள்ள பெண்களை தொழில்முனைவோராக மாற்றுவதே எனது முதல் கடமை: பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்குறுதி
சென்னை, ஏப்.15: தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாலாஜி நகர் 4வது பகுதி குனாளம்மன் கோயில் தெரு, மதியழகன் தெரு, முருகன் கோயில் தெரு, புலுதிவாக்கம் பஸ் டிப்போ சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று வீதி வீதியாக சென்று தாமரை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். அப்போது அவர் பேசியதாவது:
தென்சென்னை தொகுதி தகவல் தொழில்நுட்பம் நிறைந்த தொகுதி.
நாட்டின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்களிப்பை கொடுப்பவர்கள் மென்பொருள் பொறியாளர்கள். அவர்களுக்கு டென்ஷன் இல்லாத சூழ்நிலையை உருவாக்கி கொடுக்கவேண்டும். குறிப்பாக பெண் பொறியாளர்களுக்கு தங்கும் இடம், உணவு ஆகியவை பிரச்னையாக இருக்கிறது. இதைபோக்க சோழிங்நகல்லூர், பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் நவீன வசதிகளுடன் கூடிய தங்கும் விடுதிகள் அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.