பாஜக தேர்தல் அறிக்கை குறித்து ப.சிதம்பரம் கருத்து
பாஜக அரசு கட்டிக்கொடுத்த இலவச வீடுகள் எங்கே?..கல்விக்கடனை ரத்து செய்ய மறுப்பது ஏன்?: பாஜக தேர்தல் அறிக்கை குறித்து ப.சிதம்பரம் கருத்து
அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் எரிவாயு வினியோகம் செய்வதாக பாஜக அளித்துள்ள வாக்குறுதி மிகப்பெரிய வேடிக்கை என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். காரைக்குடியில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மார்ச் 30ம் தேதி பாஜக தேர்தல் அறிக்கை தயாரிக்க குழுவை அமைத்தனர். எப்படி 14 நாட்களில் 14 லட்சம் பரிந்துரைகளை எப்படி பரிந்துரை செய்தார்கள் என்பதை பாஜக விளக்க வேண்டும் என தெரிவித்தார்.