பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா
பெங்களூருவில் பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா ஆதரவாளர்கள் அத்துமீறல்: கேள்வி கேட்ட வாடிக்கையாளர்கள் மீது குண்டர்களை வைத்து தாக்குதல்
பெங்களூருவில் பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா மற்றும் பாஜக எம்.எல் .ஏ ஆகியோர் கலந்துகொண்ட கூட்டுறவு வங்கி ஆலோசனை கூட்டத்தில் கேள்வி எழுப்பிய வாடிக்கையாளர் மீது குண்டர்களை வைத்து தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது. பெங்களூருவில் கூட்டுறவு வங்கிகளின் சார்பில் சகாரா சமகாமா என்ற பெயரில் ஆலோசனை குடம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தேஜஸ்வி சூர்யா அவரது மாமாவும் பசவனக்குடி பாஜக எம்.எல்.ஏவுமான ரவி சுப்ரமணியா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ரவி சுப்ரமணியாவை பார்த்ததுமே குடத்தில் இருந்த வங்கி வாடிக்கையாளர்கள் அவருக்கு எதிராக குரல் எழுப்பினர். குடத்தில் இருவரும்தேர்தல் குறித்து மட்டுமே பேசியதாக தெரிகிறது. கடந்த சட்டசபை தேர்தலில் கூட்டுறவு வங்கிகளில் நிலவும் ஒட்டுமொத்த பிரச்சனைக்கும் தீர்வு காண்பதாக வாக்குறுதி அளித்து வெற்றி பெற்ற ரவி சுப்பிரமணியா தற்போது கூட்டுறவு வங்கி பிரச்சனைகள் குறித்து வாய்திறக்காமல் இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.