பதிரானாவை தவிர அனைவரும் வேகத்தை குறைத்தோம்: ஷர்துல் தாக்கூர் பேட்டி
மும்பை அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி வெற்றி குறித்து ஷர்துல் தாக்கூர் கூறுகையில், நாங்கள் பவுலிங்கிற்கு ஏற்றவாறு ஃபீல்டர்களை நிற்க வைத்தோம். பேட்ஸ்மேன்களை விடவும் கொஞ்சம் ஸ்மார்ட்டாக செயல்பட வேண்டியிருந்தது. இது ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பிட்ச்.
எப்போதெல்லாம் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பிட்சில் விளையாடினால், ஸ்லோயராக பந்துகள் எடுபடும். பதிரானாவை தவிர்த்து மற்ற அனைத்து பவுலர்களும் வேகத்தை கைவிடலாம் என்று முடிவு செய்தோம். பதிரானா மறுபக்கத்தில் இருந்து மிகச்சிறப்பாக யார்க்கர்களை வீசினார் என்றார்.