நடிகர் பவன் கல்யாணை கல்லால் தாக்க

ஆந்திராவில் ஜனசேனா கட்சி தலைவர் நடிகர் பவன் கல்யாணை கல்லால் தாக்க முயற்சித்த சம்பவத்தால் பரபரப்பு..!!

ஆந்திராவில் ஜனசேனா கட்சி தலைவர் நடிகர் பவன் கல்யானை கல்லால் தாக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் இரவு ஆந்திர முதல் ஜெகன்மோகன் ரெட்டியை அடையாளம் தெரியாத நபர் கல்வீசி தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் மீண்டும் கல்வீச்சு சம்பவம் நடந்துள்ளது.

குண்டூர் மாவட்டம் தெனாலியில் தேர்தல் பரப்புரையில் இருந்த பவன் கல்யாண் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கல்வீசினார். அந்த கல் பவன் கல்யாண் மீது படாமல் வெகு தூரம் சென்று விழுந்தது. கல்வீசிய நபரை ஜனசேனா கட்சி நிர்வாகிகள் பிடித்து பொலிஸாரிடசம் ஒப்படைத்தனர். இதே போன்று விசாகப்பட்டினம் மாவட்டத்தில் பிரச்சார கூட்டத்தில் சந்திரபாபு பேசி கொண்டிருந்த பொது சிலர் கற்களை வீசிவிட்டு தப்பி சென்றனர். அதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கல் எறிந்தவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.