தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை
அண்ணாமலை பிரச்சாரத்திற்கு சிறிது நேரத்திற்கு முன்பு அதே இடத்தில் பிடிபட்ட தாமரை அச்சிட்ட 2 ஆயிரம் பனியன்கள்
கோவை மாவட்டம் சூலூரில், கோவை பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை பிரச்சாரம் செய்ய இருந்த சில நிமிஷங்களுக்கு முன்பு அந்தப் பகுதியில் வந்த காரை சோதனையிட்ட தேர்தல் அதிகாரிகள், பாஜக படம் அச்சிட்ட 2 ஆயிரம் பனியன்களை பறக்கும் படை அதிகாரிகள் பிடித்தனர். தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்யப்பட்ட கார் மற்றும் பாஜக சின்னம் பொறித்த பனிகள் சூலூர் காவல் நிலையத்தில், தேர்தல் அதிகாரிகள் ஒப்படைத்தனர். அண்ணாமலை வரும் சமயத்தில் 2000 எண்ணிக்கையிலான பனியன்கள் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை – செய்தி,