தேர்தல் விதிமுறைகளை மீறிய பாஜக அண்ணாமலை
தடுத்து நிறுத்திய காவலர்களை கண்டித்து காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அண்ணாமலை சாலைமறியல்
பாஜகவின் மறியலில் ஆம்புலன்ஸ் , மற்றும் வாகனங்கள் சிக்கி கொண்டதால் பொதுமக்கள் அவதி
கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை, அமைதியான கோவையை தினமும் ஒரு கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டு வருகின்றார். பாஜக வேட்பாளராக உள்ள இவர், தேர்தல் விதிமுறைகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். இதுதொடர்பாக திமுகவினர் கொடுத்த புகாரின்பேரில் ஏற்கனவே வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மீண்டும் ஒண்டிப்புதூர், காமாட்சிபுரம் பகுதியில் இரவு 10 மணியை கடந்து பிரச்சாரத்தில் ஈடுபட முயன்ற அண்ணாமலையை காவல்துறை உயர் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி நேரம் கடந்து விட்டதை கூறி உள்ளனர். இதனால், காவல்துறை அதிகாரிகளிடம் கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டார் அண்ணாமலை. இதைத்தொடர்ந்து அண்ணாமலை அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததோடு மட்டும் இன்றி, சாலைமறியலில் ஈனுபட்டார். இதில், ஆம்புலன்ஸ் மற்றும் வாகனங்கள் இதில் சிக்கி கொண்டதால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
அமைதியான கோவையை இதுபோன்ற சட்ட ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படுத்தியும், தேர்தல் விதிமுறைகளை மீறியும் வருகின்றார் அண்ணாமலை.