தேர்தல் ஆணையம் தகவல்
மக்களவைத் தேர்தல்.. தமிழ்நாட்டில் இதுவரை ரூ.460.84 கோடி பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல்..!!
முதற்கட்ட தேர்தல் நடைபெறும் தமிழ்நாட்டில் இதுவரை ரூ.460.84 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் கூறியதாவது;
அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ.778 கோடி; குஜராத் மாநிலத்தில் ரூ.605 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை இல்லாத அளவில் ரூ.4,650 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.4,650 கோடி மதிப்புள்ள பணம், பரிசுப் பொருட்கள், மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.395.39 கோடி ரொக்கம், ரூ.1,142 கோடி பரிசுப் பொருட்கள், ரூ.562.10 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
2019 மக்களவைத் தேர்தலின்போது ரூ.3,475 கோடி பறிமுதலான நிலையில் தற்போது ரூ.4,650 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.2,500 கோடி மதிப்பில் மதுபானங்கள் மற்றும் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேர்தலில் பண பலத்தை கட்டுப்படுத்தும் மிகப்பெரிய நடவடிக்கை இது என தலைமை தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது