தூத்துக்குடி மக்களவைத் தொகுதி ஒரு பார்வை

கனிமொழி போட்டியிடுதால் இது வி.ஐ.பி தொகுதி.

2009-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு உருவான மிக முக்கியமான தொகுதிகளில் ஒன்று தூத்துக்குடி. முந்தைய திருச்செந்தூர் தொகுதியிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக தூத்துக்குடி தொகுதி உருவாக்கப்பட்டது. தற்போதைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட நாடாளுமன்ற தொகுதிதான் தூத்துக்குடி.

தமிழகத்தின் இரண்டாவது துறைமுக நகரம் என சொல்லப்படுகிறது. சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் தொழில் நகரம். சாலை, ரயில், விமானம், கப்பல் என நான்கு வகை போக்குவரத்து வசதிகளைப் பெற்ற தொகுதி தூத்துக்குடி.

பெருமளவு கிராமப்புறப் பகுதிகளைக் கொண்ட இந்தத் தொகுதியில் விவசாயம் பிராதன தொழிலாக இருக்கிறது. தாமிரபரணி பாசனப்பகுதியான ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், தூத்துக்குடி போன்றவையும், வறண்ட பகுதிகளான கோவில்பட்டி, ஒட்டபிடாரம் போன்றவையும் இந்தத் தொகுதிக்குள் உள்ளன. சர்ச்சைக்குள்ளான ஸ்டெர்லைட் மட்டுமின்றி பல தொழிற்சாலைகளும் தூத்துக்குடி பகுதியில் அமைந்துள்ளன. தீப்பெட்டி, கடலை மிட்டாய் தொழிலுக்குப் பெயர் பெற்ற கோவில்பட்டியும் இந்தத் தொகுதிக்குட்பட்ட பகுதி.

தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்துள்ளன. இங்கு இதுவும் முக்கியமான தொழிலாக இருக்கிறது. நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இடம்பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்:

⦁ தூத்துக்குடி
⦁ திருச்செந்தூர்
⦁ கோவில்பட்டி
⦁ ஸ்ரீவைகுண்டம்
⦁ ஒட்டபிடாரம் (தனி)
⦁ விளாத்திகுளம்

தூத்துக்குடி தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 14,48,159

⦁ ஆண் வாக்காளர்கள்: 7,08,234
⦁ பெண் வாக்காளர்கள்: 7,39,710
⦁ மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 215

முந்தைய தேர்தல்களில் வெற்ற பெற்றவர்கள்

1980 கோசல்ராம், காங்

1984 கோசல்ராம், காங்

1985 இடைத்தேர்தல் தனுஷ்கோடி ஆதித்தன், காங்

1989 தனுஷ்கோடி ஆதித்தன், காங்

1991 தனுஷ்கோடி ஆதித்தன்

1996 தனுஷ்கோடி ஆதித்தன்

1998
ராமராஜன், அதிமுக

1999 ஜெயசீலன், திமுக

2004 ராதிகா செல்வி, திமுக

2009 ஜெயதுரை, திமுக

2014 ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி அதிமுக

2019 கனிமொழி, திமுக

இந்தாண்டு 2024இல்
திமுகவில் மீண்டும் கனிமொழி

தாமாகாவில் விஜயசீலன்

அதிமுகவில் சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.