அமைச்சர் உதயநிதி
எடப்பாடி பழனிச்சாமி என்று கூறாதீர்கள்,
எங்களுக்கு அசிங்கமாக உள்ளது என்றனர் எடப்பாடி மக்கள்: அமைச்சர் உதயநிதி
முதல்வர் மு.க.ஸ்டாலின் யார் காலிலும் விழுந்தது இல்லை. இந்தப் படத்தில் உள்ளது யார் என்று உங்களுக்கு தெரியும். தவழ்ந்து போவது யார், காலில் விழுந்தது யார் என்பது எல்லாம் உங்களுக்கு தெரியும். இரண்டு நாட்களுக்கு முன்பு எடப்பாடிக்கு சென்றிருந்தேன். அந்த ஊர்காரர்கள் எல்லாம் எடப்பாடி பழனிச்சாமி என்று கூறாதீர்கள்.
எங்களுக்கு அசிங்கமாக உள்ளது என்று தெரிவித்தனர். பாதம் தாங்கி பழனிச்சாமி என்று தான் அவரை கூற வேண்டும். சசிகலா காலை பிடித்து முதல்வராகி விட்டு அவருக்கு துரோகம் செய்தார். யார் இந்த சசிகலா என்று கேட்டார். சசிகலாவிற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் துரோகம் செய்தார்.