அமைச்சர் உதயநிதி பிரச்சாரம்
செங்கலுக்கும் கட்டிடத்திற்கும் உள்ள வித்தியாசம் தான் திராவிட மாடலுக்கும் பாஜ மாடலுக்கும் உள்ள வித்தியாசம்: அமைச்சர் உதயநிதி பிரச்சாரம்
கடந்த தேர்தலில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி வாக்கு சேகரித்தார். ஆனால் தமிழகத்தில் கட்டவில்லை. பல கோடி ரூபாய் செலவில் பல்நோக்கு மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டியுள்ளார். ஒரு வருடம் என்று கூறி பத்தே மாதத்தில் கட்டி முடித்து பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இதுதான் திராவிட மாடல் அரசு. செங்கலுக்கும் கட்டிடத்திற்கும் உள்ள வித்தியாசம் தான் திராவிட மாடலுக்கும் பாஜ மாடலுக்கும் உள்ள வித்தியாசம். பிரதமரை பெயர் சொல்லி கூப்பிடாதீர்கள். மிஸ்டர் 29 பைசா என்று தான் அழைக்க வேண்டும். நாம் ஒரு ரூபாய் கொடுத்தால் மத்திய அரசு நமக்கு 29 பைசா மட்டுமே திருப்பித் தருகிறது. ஆனால் உத்தரப்பிரதேசத்திற்கு மூன்று ரூபாயும், பீகாருக்கு ஏழு ரூபாயும் வழங்குகிறது. மொழி உரிமை, கல்வி உரிமை, நிதி உரிமை ஆகியவற்றை நாம் மீட்டெடுக்க வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும் என்றார்.