✅திருச்சியில் நாடாளுமன்றத்தேர்தலில்
✅திருச்சியில் நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ஐந்தாயிரம் மாணவிகள் ஹீலியம் பலூன்களைப் பறக்க விட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பள்ளி மாணவிகள் 5 ஆயிரம் பேர் மூவர்ண ஆடை அணிந்து மைதானத்தில் ஒன்று கூடி ஹீலியம் பலூன்களை வானில் பறக்கவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான பிரதீப் குமார் தலைமையில் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் என அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.