ராகுல்காந்தி
ஜனநாயகத்தின் தாய் என உலக நாடுகள் இந்தியாவை பார்த்த பார்வை மாறிப்போய், ஜனநாயகம் இந்தியாவில் கொல்லப்படுகிறது என்று பார்க்கும் சூழல் வந்துள்ளது.
இந்த சூழலை மாற்ற இந்தியா கூட்டணி என்ன செய்யப்போகிறது என கூற விரும்புகிறேன். முக்கிய பிரச்னையாக உள்ள வேலையின்மை தீர்க்கப்படும்
தமிழ்நாட்டு பெண்களும் சரி, இந்தியாவின் பெண்களும் சரி, தேசத்தின் எதிர்காலத்தை அவர்களே பார்த்துக்கொள்கிறார்கள்
ஏழைப் பெண்களுக்காக அருமையான திட்டத்தை காங்கிரஸ் ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. குடும்பத்தின் ஒரு பெண் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு ஆண்டுக்கும் ₹1 லட்சம் வழங்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்
மீனவர்களின் முன்னேற்றம் மற்றும் அவர்களின் தொழிலை முன்னேற்ற தனி தேர்தல் அறிக்கையை தயார் செய்துள்ளோம்
ஏற்கனவே சொன்னது போல, இது ஒரு தத்துவப் போர். நாட்டின் அரசியல் சாசனத்தை காக்கும் இந்தப் போரில் நாம் வெல்வோம் என்பதை உறுதியாகச் சொல்கிறேன்