பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி ஒரு பார்வை

பொள்ளாச்சியின் மத்தியில் அமைந்துள்ள சுப்பிரமணியர் கோயில் கல்வெட்டின் கூற்றுப்படி 1,000 ஆண்டுகள் தொன்மையானது பொள்ளாச்சி. நகரைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகள் பல ஜமீன்களின் ஆளுமையின் கீழ் இருந்தன. பின்னர் ஆங்கிலேயர்கள் ஆட்சியின்கீழ் வந்தன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக விளங்கியது பொள்ளாச்சி.

1977-ம் ஆண்டு முதல் தனித் தொகுதியாக இருந்த பொள்ளாச்சி தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு 2009-ம் ஆண்டு பொதுத் தொகுதியாக மாறியது.

தமிழகத்தில் அதிக அணைகளைக் கொண்ட மக்களவைத் தொகுதி என்பதால், தென்னை, திராட்சை, நிலக்கடலை, மக்காசோளம், காய்கறிகள், தேயிலை உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. தமிழகத்தில் அதிகம் தேங்காய் விளையும் பகுதி இது. குறிப்பாக தென்னை விவசாயம், அது சார்ந்த தேங்காய், தேங்காய் நார் தொழில் அதிகமாக நடக்கிறது. கேரள மாநில எல்லையொட்டிய தொகுதி என்பதால் அதன் தாக்கம் உண்டு.

தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு பொள்ளாச்சி தொகுதி சற்று மாறுதல் அடைந்துள்ளது. கோவையின் தொண்டாமுத்தூர் பகுதியும் இணைந்துள்ளதால், கோவை பகுதியின் அரசியல், சமூக சூழல் தாக்கம் கொண்ட தொகுதியாக உள்ளது. திராவிட கட்சிகளே தொடர்ந்து போட்டியிட்டு வந்துள்ள தொகுதி இது. மதிமுகவுக்கும் ஒட்டு வங்கி இருந்ததால் இரண்டுமுறை அக்கட்சியின் சார்பில் கிருஷ்ணன் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.

1951, 1957, 1962 ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. பொள்ளாச்சி தொகுதியில் அதிமுக ஏழு முறை வென்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இடம்பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்:

  • பொள்ளாச்சி
  • கிணத்துக்கடவு
  • மடத்துக்குளம்
  • உடுமைலப்பேட்டை
  • தொண்டாமுத்தூர்
  • வால்பாறை (தனி)

பொள்ளாச்சி தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 15,81,795

  • ஆண் வாக்காளர்கள்: 7,66,077
  • பெண் வாக்காளர்கள்: 8,15,428
  • மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 290

முந்தைய தேர்தல்களில் வெற்றிபெற்றவர்கள்:

1971
நாராயணன், திமுக

1971
இடைத்தேர்தல்
கலிங்கராயர், திமுக

1977 ராஜூ, அதிமுக

1980
தண்டபாணி, திமுக

1984 அண்ணாநம்பி, அதிமுக

1989
ராஜா ரவி வர்மா, அதிமுக

1991
ராஜா ரவி வர்மா, அதிமுக

1996
கந்தசாமி, தமாகா

1998
தியாகராஜன், அதிமுக

1999 கிருஷ்ணன், மதிமுக

2004 கிருஷ்ணன், மதிமுக

2009 சுகுமார், அதிமுக

2014 மகேந்திரன், அதிமுக

2019
சண்முகசுந்தரம் K, தி.மு.க

2024-ம் ஆண்டு பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில்

திமுகவில் ஈஸ்வரசாமி

பாஜகவில் வசந்தராஜன்

அதிமுகவில் அப்புசாமி கார்த்திகேயன்
போட்டியிடுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.