இந்திய மாணவர்களும் உயிரிழந்தனர்.

அமெரிக்காவுக்கு படிக்கச் செல்லும் மாணவர்கள் கடுமையான சூழலில் சிக்கி உயிரிழப்பது ஏன்

2024ஆம் தொடங்கி முதல் 100 நாட்களில் அமெரிக்காவுக்கு படிக்கச் சென்ற சென்ற இந்தியர்களில் 11 பேர், வெவ்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளனர்.

பல்கலைக்கழக வளாகம், உணவகம், நடைபயிற்சிக்கு சென்ற இடம் என பல இடங்களில் இந்திய மாணவர்களின் இத்தகைய திடீர் மரணங்கள் நிகழ்ந்துள்ளது, அங்கு படிக்கச் சென்ற இந்தியர்கள் மத்தியிலும் அவர்களுடைய குடும்பத்தினரிடமும் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவுக்கு உயர்கல்விக்காக அதிகம் பேர் செல்லும் நாடுகளின் பட்டியலில் உள்ள இந்தியா, அடுத்தடுத்து நிகழும் இந்திய மாணவர்களின் மரணத்தை எப்படி பார்க்கிறது?

பல ஆயிரம் மைல் கடந்து வேறு ஒரு நாட்டிற்கு செல்லும் போது அந்த நாட்டின் கலாசாரம், பருவநிலை, சட்டத்திட்டம் ஆகியவற்றை அறிந்து கொள்வதன் முக்கியத்துவத்தை இந்த மரணங்கள் உணர்த்துவதாக அமைந்துள்ளது என்கின்றனர், அமெரிக்கவாழ் இந்தியர்கள்.

சம்பவம் 1 – ஜனவரி 15, 2024

இடம் – கனெக்டிகட்

மரணம் – ஒரே அறையில் தங்கி இருந்த தினேஷ் (22) மற்றும் நிகேஷ் (21) ஆகிய 2 இந்திய மாணவர்களும் உயிரிழந்தனர்.

காரணம் – ஹீட்டரில் இருந்து வெளியேறிய அதிக அளவு கார்பன் மோனாக்சைடு கசிந்து அந்த காற்றை சுவாசித்தது காரணமாக இருக்கலாம்.

சம்பவம் 2 – ஜனவரி 2024

இடம் – UIUC பல்கலைக்கழகம், இல்லினாய்ஸ்

மரணம் – பல்கலைக்கழக வளாகம் அருகே அகுல் தவான் (18) உயிரிழப்பு.

காரணம் – ஹைபோதெர்மியா என்ற அதீத குளிரின் பின்விளைவாக இருக்கலாம் என கருதப்படுகிறது. ராகிங் காரணமாக கடும் குளிரில் நிறுத்தப்பட்டாரா? அல்லது தாமாக வழிதவறி சென்று கடுங்குளிரில் மாட்டிக் கொண்டாரா? என கண்டறியப்படவில்லை.

சம்பவம் 3 – ஜனவரி 22, 2024

மரணம் – வீடற்ற முதியவரால், பகுதி நேர பணி செய்யும் உணவகத்தில் வைத்து விவேக் சைனி (25) கொல்லப்பட்டார். தலையில் 50 க்கும் மேற்பட்ட முறை குத்திக் கொன்ற அப்படுகொலை வீடியோ வைரலானது. ஏற்கனவே அந்த முதியவருக்கு 2 முறை விவேக் உணவு கொடுத்ததாகவும் தகவல் உள்ளது.

சம்பவம் 4 – ஜனவரி 28, 2024

இடம் – Purdue பல்கலைக்கழகம், இண்டியானா

மரணம் – ஊபர் நிறுவன வாடகை கார் மூலம் பல்கலைக்கழகத்திற்கு வந்து இறங்கிய நீல் ஆச்சார்யா (19) மாயம். பின், சடலமாக மீட்கப்பட்டார்.

காரணம் – Asphyxia என்ற அதீத குளிர் மற்றும் எத்தனால் விஷத்தன்மை பாதிப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.